எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 29 July 2017

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சபையில் அமைதியின்மை தொடர்ந்து வலுப்பெற்று வந்தமையினால், ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை சபை அமர்வுகளை ஒத்திவைக்க நேரிட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் யோசனை திட்டத்தை முன்வைத்த பின்னர், தினேஸ் குணவர்தன கோரிக்கையொன்றை முன்வைத்ததால், ஒலி எழுப்பப்பட்டதாகவும், அதன்போது அனுரகுமார திசாநாயக்க தனது உரையை நிறுத்தாமல் முன்னெடுத்ததாகவும் சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் சபை மத்திக்கு வருகைதந்து, வாக்கெடுப்பிற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் இலத்திரனியல் முறையில் அதனை முன்னெடுக்க முடியாது போனதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பெயரை அறிவிப்பதன் ஊடாக வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்த போதிலும், சில உறுப்பினர்கள் செங்கோலை சபையில் இருந்து எடுத்துச் செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தமையினால், குறித்த பிரேரணைக்கு அனுமதி வழங்குவதாக சபாநாயகர் அறிவித்ததாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சபையை ஒத்திவைத்து உறுப்பினர்கள் வௌியேறியதன் பின்னர், செங்கோல் இன்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சபை மத்தியில் கூடியதாக எமது பாராளுமன்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Post Top Ad

Responsive Ads Here