அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தெற்குப் பகுதியை குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 28 July 2017

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தெற்குப் பகுதியை குத்தகைக்கு விடும் ஒப்பந்தம்

உள்ளூர் எதிர்ப்புக்கள் காரணமாக நீண்ட காலம் தடைப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தெற்குப் பகுதியை குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் நாளை சனிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது .
பல மாதங்களாக இழுபட்ட இந்த 1.1பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் இறுதியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது .
கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமொன்றில் 15000ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட ஒரு கைத்தொழில் பேட்டையை நிறுவ ,99வருட காலத்துக்கு , சீனாவுக்கு குத்தகைக்கு விட்டது , பொது மக்களின் கோபத்தைக் கிளறி இருந்தது .சீன கடல்படைக் கப்பல்களின் நடமாட்டம் வரலாம் அன்ர அச்சத்திலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .
இந்தப் பதட்ட நிலையை தவிர்க்க , சென்ற வாரம் அமைச்சரவையில் சீனாவுடனான புதிய ஒப்பந்தம் ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .சீனாவுக்கு 70வீதமான பங்குகளையே புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் வைத்திருக்க முடியும் இராணுவ தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட முடியாது .
பிரதமர் ரணில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாளை சனிக்கிழமை அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளோம் .,நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் , இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ளமை இங்கே குறிபிடத்தக்கது

Post Top Ad

Responsive Ads Here