பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் மீண்டும் சேருமாறு அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை அழைப்பு - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 6 August 2017

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் மீண்டும் சேருமாறு அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை அழைப்பு

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் மீண்டும் சேருமாறு அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை அழைப்பு விடுத்துள்ளது. 2015-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12ம் திகதி ஏற்படுத்தப்பட்ட பாரீஸ் பருவ நிலை மாற்ற உடன்பாடு 2016-ம் ஆண்டு, நவம்பர் 4ம் திகதி அமுலுக்கு வந்தது. இந்த உடன்பாட்டில் 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ள நிலையில் 158 நாடுகள் அதை உறுதி செய்துள்ளன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமாகியுள்ள பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு வகை செய்கிறது.
எனினும் பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து அந்த உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஜூன் மாதம் டிரம்ப் அறிவித்திருந்தார்.
அத்துடன் பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் இருந்து விலகுவதற்கான முறையான அறிவிக்கையை, ஐ.நா. சபையிடம் அமெரிக்கா நேற்று முன்தினம் வழங்கியிருந்தது.
இந்தநிலையில் பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டில் மீண்டும் சேர்வதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டால் அதை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டரெஸ்சி; வரவேற்பார் என அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளர்.

Post Top Ad

Responsive Ads Here