இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 6 August 2017

இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம்

சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் கூறலாம்.
அ.நிக்ஸன்
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் செய்யப்பட்ட பின்னர் எழுந்துள்ள விமர்சனங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றியதாகவும். சீனாவுக்கு கையளிக்கப்பட்ட பின்னர் துறைமுகத்தில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன் படி இலங்கைக்கும் கிடைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 70வீதம் 30 வீதம் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தாலும் வருமானத்தின் அதிகரிப்பை பொறுத்து இலங்கைக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
மௌனமாக இருப்பதன் நோக்கம்?
சீனாவுடன் கூடுதலான உறவுகளை பேணுவது ஆசியப்பிராந்தியத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையில்தான் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனால்தான் ரணில் மைத்திரியின் கூட்டுடன் நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது இதன் பின்னணில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா செயற்பட்டார். ஆனால் நல்லாட்சி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சென்று விட்ட நிலையிலும் மீண்டும் சீனாவுடன் உறவை ரணில் மைத்திரி அரசாங்கம் புதுப்பிக்கின்றது.
அதாவது மஹிந்த ராஜபக்சவுடன் செய்விருந்த வேலைத் திடடங்களை சீனா நல்லாட்சி அரசாங்கத்துடன் மிகவும் இலகுவான முறையில் செய்து முடிக்கின்றது என கொழும்பில் உள்ள மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தாhர். ஆகவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழ்த்ததன் நோக்கம் என்ன? இந்த இடத்தில் இந்தியா உள்ளிட்ட மேற்குலகநாடுகள் மௌனமாக இருப்பதன் அர்த்தம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற உறுதிமொழியுடன் நல்லாட்சியை மேற்குலக நாடுகள் கொண்டு வந்தன.
இலங்கை அரசு என்ற கட்டமைப்பு
ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக சீன இலங்கை உறவு புதிப்பிக்கப்படுகின்றது. இங்கு இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் முக்கியன ஒரு நோக்கத்தை கூற முடியும். அதவாது யார் ஆட்சி அமைத்தாலும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்றை பௌத்த தேசியவாதம் பின்பற்றி வருகின்றது. குறிப்பாக இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் உருவான இலங்கையின் வெளியுறவுக்கொள்கைதான்கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றதில் இருந்து அந்தக் கொள்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக்சவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசு மீதான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத்தின் வெளிப்பாடுதான் 2012ஆம் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம். இலங்கை அரசு என்பது பௌத்த கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவானது என்ற அடிப்படையில் சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து காலத்திற்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பௌத்த கலாச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு ஆட்சிபுரிந்தன.
வெளியுறவுக் கொள்கை
ஒரு நாட்டில் வாழும் அத்தனை சமூகங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயலாற்றுவதுதான் ஒரு அரசின் பண்பு. ஏனெனில் அரசு என்பது தனியே ஒரு சமூகத்தால் மாத்திரம் உருவாக்கப்பட்டது அல்ல. நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் உழைப்பால் அரசு தோற்றுவிக்கப்பட்டது என்பது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் அடிப்படை விதி. ஆனால் இலங்கையில் அந்த விதிமுறைகளுக்கு மாறாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் செயற்பட்டு வந்தமை வரலாறு. அந்த அடிப்படையில்தான் நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவக் கொள்கை என்பது கூட அமைந்துள்ளது.
இந்தியா, சீனா, ஆகிய நாடுகளுடன் அந்த நாடுகளிடையே உள்ள முரண்பாட்டு தன்மைகளை பயன்படுத்தியும் தமது பௌத்த தேசியவாதத்திற்கான பொருளாதார அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும் இலங்கை அரசு அவ்வப்போது செயற்பட்டு வந்ததை மேற்குலகநாடுகளின் ஆதரவுடன் உருவான ரணில் மைத்திரி நல்லாட்சியும் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசு என்ற கட்டமைப்பு தமது நலன்சாhந்;து தமிழர் விவகாரத்தை கையாள்வதற்கு தமது ஆதரவை பெற்று பின்னர் தங்கள் அரசியல், பொருளாதார நலனில் கூட அக்கறை செலுத்தாத அல்லது புறம் தள்ளுகின்ற போக்கை கடைப்பிடிக்கின்றது எனபதை மேற்குலக நாடுகள் அவதானிக்க தவறுகின்றன.
இராஜதந்திர தோல்வி
அல்லது அவர்களின் இலங்கை குறித்த இராஜதந்திர தோல்வி என்றுகூடச் சொல்லாம். அவ்வாறு இராஜதந்திர தோல்வியாக இருக்குமானால் அவ்வாறான செயல்திறன் உள்ள இராஜதந்திர அணுகுமுறை ஒன்றை இல்கை பின்பற்றுகின்றதா? அவ்வாறான செயலூக்கம் உள்ள இராஜதந்திரிகள் இலங்கையில் இருக்கின்றனரா? என்பது கேள்வியாகும். ஆனால் அவ்வாறான செயல்திறன் உள்ள இராஜதந்திரிகள் எவரும் இலங்கையில் இல்லை என்பது மேற்குலக நாடுகளுக்க தெரியும். சீனாவுடைய இராஜதந்திரமே அது என்பதும் அவர்களுக்கு புரியும். இருந்தும் அவ்வாறான சீன ஆதிக்கத்தை உடைத்து தமது நலனை ஓங்கச் செய்யும் சக்தி மேற்குலக நாடுகளுக்கு ஏன் இல்லாமல் போனது?
1920 ஆம் ஆண்டு பிரித்தானியரை எதிர்ப்பதற்காக தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து உருவாக்கிய தேசிய இயக்கம் பிளவுபட்டதில் இருந்து இனமுரண்பாடு ஆரம்பித்தது என்ற கருத்தின் அடிப்படையில் இலங்கை சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வெளியுறவு கொள்கை என்பது தமிழர் எதிர்ப்பு அரசியலாகவே காணப்படுகின்றது. இது இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் தெரிந்த ஒன்று. ஜே.ஆர்;.ஜயவர்த்தன, பிரேமதாச, சந்திரிக்கா முதல் இன்றைய மைத்திபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கம் வரையும் அந்த அனுபவத்தை அவர்கள் கண்டும் அனுபவித்தும் உள்ளனர்.
இலங்கை அரசு செல்லப்பிள்ளை
இலங்கையை பொறுத்தவரை சிறிய நாடு அதுவும் இந்தியாவுக்கு அருகில் இருக்கும் நாடு என்ற உணர்வு சீனா, உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் காணப்பட்டது. இது இலங்கை ஆட்சியாளர்களுக்கு வசதியாக அமைந்துவிட்டது. இதன் காரணத்தால் இலங்கை மேற்படி நாடுகளுக்கு செல்லப்பிள்ளையாக இருப்பதற்கான ஒரு காரணமாகவும் அது அமைந்தது எனலாம். ஆனால் இவ்வாறான செல்லப்பிள்ளை விளையாட்டு அடுத்து வரவுள்ள ஆண்டுகளில் மேற்குலக நாடுகளுக்கு அரசியல், பொருளாதார ரீதியான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.
இந்த நிலைக்கு பிரதான காணரம் இந்தியாவின் தமிழர் விவகாரம் குறித்த கொள்கைதான் என்பதை இந்த பத்தி எழுத்தில் பல தடவை சொல்லப்பட்டு உள்ளது. ஏவ்வாறாயினும் சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் கூறலாம்.
thankyou அ.நிக்ஸன்

Post Top Ad

Responsive Ads Here