கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிலாபத்தைச் சேர்ந்த சரத் ஹேமச்சந்திர என்ற 51 வயது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார். மேலும் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு மாபெரும் உதவியை நீதிபதி இளஞ்செழியன் செய்துள்ளார்.
நீதிபதி இளஞ்செழியனுடன் 15 வருடங்களாக சேவையாற்றி தன்னுயிரை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்தவரின் இரு பிள்ளை
களையும் நீதிபதி இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இரு பிள்ளைகளையும் தனது சொந்தப் பிள்ளைகளைப் போல் பராமரித்து, தான் இருக்கும் வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகலவற்றையும் ஒரு தந்தையின் இடத்திலிருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்துள்ளார்.
இவருடைய இறுதிச்சடங்கு சிலாபம் பகுதியில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றதுடன் இறுதி நிகழ்வுக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

