விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மிருதங்க கலைஞன் கண்ணதாசனிற்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளது வவுனியா மேல் நீதிமன்றம். யுவதியொருவரை பலவந்தமாக வீட்டிலிருந்து இழுத்து சென்றதாக யுவதியின் பெற்றோர் தொடுத்த வழக்கிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் கணெய்சுந்தரம் கண்ணதாஸ் (வயது 50) என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம்
09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டுக்காக குற்றப் பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணினுடைய தந்தை நாகரத்தினம் விஜயபாலன், தாய் விஜயபாலன் சாந்திமலர் சாட்சியமளித்திருந்தனர். இதன்போது தனது மகளை குறிப்பிட்ட எதிரி வீட்டில் இருந்து இழுத்துச் சென்றதாக சாட்சியமளித்தார். அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும் சாட்சியமளித்தனர். அதன் பின் எதிரி நீதிமன்றிலே சாட்சியமளித்திருந்தார்.
எதிரி சாட்சியமளிக்கும் போது தான் தற்போது யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருவதாகவும், தான் ஏற்கனவே விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்திருந்தார்.
எதிர்தரப்பு விவாதம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதி வழக்கு நியமிக்கப்பட்டு அன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிரியை குற்றவாளி எனக கண்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியதோடு, தண்டனைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் (25.07) வழக்கு நியமிக்கப்பட்டு இருந்தது.
இந்த எதிரி ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் எதிரிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி இந்த எதிரிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட குறித்த பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன நெறிப்படுத்தியிருந்தார்.
2016இல் கிளிநொச்சியின் உருத்திரபுர பகுதியில் கட்டாய ஆட்சேர்ப்பு பொறுப்பாளராக கண்ணதாசன் செயற்பட்டு, ஏராளம் பேரை கடத்தியிருந்தார். இறுதியுத்தம் வரை கட்டாய ஆட்சேர்ப்பில் செயற்பட்ட கண்ணதாசன், ஏராளமானவர்களை கடத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Responsive Ads Here
Wednesday, 26 July 2017
Home
உள்நாட்டு செய்திகள்
யாழ்ப்பாணம்
மிருதங்க கலைஞன் கண்ணதாசனிற்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளது வவுனியா மேல் நீதிமன்றம்
மிருதங்க கலைஞன் கண்ணதாசனிற்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளது வவுனியா மேல் நீதிமன்றம்
Tags
# உள்நாட்டு செய்திகள்
# யாழ்ப்பாணம்
About Unknown
யாழ்ப்பாணம்
Labels:
உள்நாட்டு செய்திகள்,
யாழ்ப்பாணம்
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

