மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன்குமார குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை எண்ணெய்க் கிணறுகள் கட்டமைப்பு மற்றும் துறைமுகம் ஆகியவற்றை சீனாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை நாளை (25) சமர்ப்பிக்க பிரதமர் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் ஆகியோர் தயாராவதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமது ஒன்றியத்துடன் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அப்பால் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாகவும் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
எனவே தங்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும்வரை இன்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.







