கொழும்பு தெற்கு பகுதிகளில் நாளை மறுதினம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 18 July 2017

கொழும்பு தெற்கு பகுதிகளில் நாளை மறுதினம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்

தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளில் நாளை மறுதினம் (20ம் திகதி) 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடுகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு ஏற்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 20ம் திகதி இரவு 9 மணி தொடக்கம் 21ம் திகதி அதிகாலை 5 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தெஹிவளை, கல்கிஸ்ஸ, இரத்மலான, சொய்சாபுர, அத்திடிய, கடுவான, பெபிலியான, பெல்லன்தொட, நெதிமால, கலுபோவில, நுகேகொடை, கொஹுவலை, போன்ற பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
மேலும், வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை உள்ளிட்ட தெற்கு கொழும்பு பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

Post Top Ad

Responsive Ads Here