முல்லைத்தீவு கடலில் விடுதலைப் புலிகளின் படகு - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 18 July 2017

முல்லைத்தீவு கடலில் விடுதலைப் புலிகளின் படகு

முல்லைத்தீவு கடலில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு தொடர்பில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என, கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் பிரதான கட்டுப்பாட்டு அறைகளை கொண்ட படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடற்புலிகளுக்கு சொந்தமான இளம்தாரை என்ற படகு எட்டு வருடங்களின் பின்னர் தற்போது செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும், விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் படகு ஒன்று வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில் கரையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சமிந்த வலாகுளுகே தெரிவித்துள்ளார்
அத்துடன், குறித்த படகு எந்த காரணத்திற்காகவும் கடலுக்கு அனுப்பப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த படகில் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்க வேறு ஒரு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடற்களமுனையில் இடம்பெற்ற பல சமர்களின் போது, கடற்படைத் தளபதி சூசை இந்த படகிலிருந்து கட்டளைகளை பிறப்பித்ததாக அண்மையில் வெளியாகிய செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Responsive Ads Here