பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சஞ்சீவ தர்மரட்ண இடமாற்றம்-புதிதாக கே.பி பிரணாந்து நியமனம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 9 June 2017

பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சஞ்சீவ தர்மரட்ண இடமாற்றம்-புதிதாக கே.பி பிரணாந்து நியமனம்

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சஞ்சீவ தர்மரட்ண இடமாற்றலாகி பயிற்றுவித்தல் மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்  போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பாக இருந்த   பிரதி பொலிஸ் மா அதிபர்    கே.பி பிரணாந்து யாழ் மாவட்ட  பிரதி பொலிஸ் மா அதிபராக   நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்கியும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் பொலிஸ் திணைக்களத்தின் தேவைக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர வட பகுதிக்கு வெற்றிடமாக இருந்த  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிற்கு  கே.ஈ.ஆர்.எல் பெர்ணான்டோ நியமிக்கப்பட்ட நிலையில் தனது   கடமையை பொறுப்பேற்றுள்ளார்.இவர் ஏற்கனவே விசேட பாதுகாப்பு பிரிவின்  அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

Post Top Ad

Responsive Ads Here