ஆசிரியரால் தாக்கபட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி! - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 9 June 2017

ஆசிரியரால் தாக்கபட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை ஆசிரியர் ஒருவர் தாக்கியதால் அந்த மாணவன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும். பெற்றொர் இதுகுறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 09.07.2017.வெள்ளிகிழமை பிற்பகல் 12.35 மணி அளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

குறித்த மாணவனுக்கு ஆசிரியர் ஒருவாரல் பாட வேலைத் திட்டம் ஒன்று வழங்கியபோது குறித்த மாணவண் இரண்டாவது முறையாக குறித்த பாடத்தினை செய்து காட்டிமைக்காக குறித்த ஆசிரியர் மாணவனை தலைபகுதியை பிடித்து கதிரையில் அடித்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மாணவனின் உடம்பில் பின்பகுதியில் கையால் தாக்கியதாக பாதிக்கபட்ட சிறுவனின் பெற்றோர் முறைபாட்டில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தாக்கபட்ட மாணவனின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன், இந்த முறைப்பாடு குறித்து நோர்வூட் பொலிஸாருக்க தகவல் வழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் - பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், மாணவனின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டும் பாடசாலை, மாணவன் பெயர்களை நாம் வெளியிடவில்லை.

பாடசாலைகளில் மாணவர்கள் மனித நேயமற்ற முறையில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கக் (அடிக்கக்) கூடாது என்ற கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், மாணவரின் நன்மை கருதி குறைந்தபட்சமாக கண்டிக்க வேண்டியிருப்பதாக ஆசிரியர் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுவதையும் பலர் ஆதரித்து வருகின்றனர்.

Post Top Ad

Responsive Ads Here