கிளிநொச்சியில் 18 பரீட்சை நிலையங்களில் 1617 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 6 August 2017

கிளிநொச்சியில் 18 பரீட்சை நிலையங்களில் 1617 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

நாளை மறுதினம் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 1617 மாணவா்கள் 18 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளனா்.
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை நாளை மறுதினம் எட்டாம் திகதி நாடு முழுவதும் ஆரம்பமாகவுள்ளது. நாடு  முழுவதும் 2230 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 15227  பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனா்.அத்தோடு 28000 அதிகாரிகளும் கடமையாற்றவுள்ளனா்.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 08 ஓருங்கிணைப்பு நிலையங்கள் 18 பரீட்சை நிலையங்கள் 1617 மாணவா்கள் இதில் 423 போ் வெளிவாரி பரீட்சார்த்திகளாக தோற்றவுள்ளனா்.
இதேவேளை இம்மாதம் நடைபெறவுள்ள தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சைக்கு 10 ஒருங்கிணைப்பு நிலையங்களும்,32 பரீட்சை நிலையங்களும், 3141 மாணவா்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனா். பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
FacebookTwitterGoogle+
Share

Post Top Ad

Responsive Ads Here