இலங்கை, சீனா ஆகியன கூட்டாக இணைந்து பல்கலைக்கழகங்களை உருவாக்க நடவடிக்கை - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 2 August 2017

இலங்கை, சீனா ஆகியன கூட்டாக இணைந்து பல்கலைக்கழகங்களை உருவாக்க நடவடிக்கை

அண்மையில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் இலங்கையுடனான உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இரு தரப்பு உறவுகளில் எவ்வித அழுத்தங்களையும் கொண்டு வராது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில எதிர்ப்புக்களினால் இரு தரப்பு உறவுகள் எவ்வித அடிப்படையிலும் பாதிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை, சீனா ஆகியன கூட்டாக இணைந்து பல்கலைக்கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Post Top Ad

Responsive Ads Here