புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.

