சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 2 July 2017

சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம்

அரசாங்கம் அவசர கதியில் கைச்சாத்திட்டு உறுதி செய்த காணாமல் போக செய்வதற்கு எதிரான சர்வதேச இணக்கப்பாட்டை இலங்கையில் அமுல்படுத்ததுவதற்காக சட்டமூலம் வரைவு ஒன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது இலங்கையர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அதிகாரம் வழங்கும் சட்டமூலம்.

இந்த சட்டமூலத்தின் 8 ஆவது பந்திக்கு அமைய, இலங்கைக்குள் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமான சந்தேக நபர், குற்றம் சுமத்தப்படும் நபர் அல்லது குற்றவாளியாக இனங்காணப்படும் நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு வெளிநாடு ஒன்று கோர முடியும்.

அப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால், அந்த நபருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யவோ, இல்லையொன்றால், அந்த நபரை வெளிநாட்டின் கையளிக்கவோ இலங்கைக்கு முடியும்.

குறித்த சட்டமூலத்தில் 21 ஆவது பந்திக்கு அமைய இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிரான சர்வதேச இணக்கப்பாடுகளை முற்றாக அமுல்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்யும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்டவருக்கு வழங்கப்படும்.

23 ஆவது பந்திக்கு அமைய இந்த சட்டமானது எழுத்துமூலம் உள்ள ஏனைய சட்டங்களுக்கு அப்பால் சென்ற அதிகாரத்தை கொண்டது.

அத்துடன், 10 மற்றும் 11 ஆம் பந்திகளுக்கு அமைய ஒரு நாடு வேறு ஒரு உறுப்பு நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டமை பொறுப்புக் கூறவேண்டியவர் என சந்தேகிக்கும் வெளிநாட்டவராக இருந்தாலும் அவரை சிறை வைக்கும் அதிகாரம் உள்ளது.

சிறையில் அடைத்த பின்னர், அந்த நபரை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்காமல், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை தொடர முடியும்.

சிறையில் அடைக்கப்பட்ட நபரின் தாய்நாடு சம்பந்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குள் இல்லாவிட்டாலும் அந்த நபரை சிறையில் அடைத்து வைத்திருக்கும் நாடு அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியும்.

இந்த புதிய சட்டமூலமானது போர் குற்றம் என்ற வார்த்தையை பயன்படுத்தாது காணாமல் போனவர்கள் என்று மாற்றி, படையினரை சர்வதேச நாடுகளின் நீதிமன்றத்திடமும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமும் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும்.

காணாமல் போனோர் என்ற வார்த்தையைக் கேட்கும் போது காணாமல் போனோரை தேடும் அப்பாவித்தனமான முயற்சியாக எண்ணத் தோன்றும்.

எனினும், இதன் நோக்கம் காணாமல் போனவர்களை தேடுவதல்ல,பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவர்களை வேட்டையாடுவதே நோக்கம்.

போரில் காணாமல் போன ஆயிரக்கணக்கான படையினர் இறந்து விட்டனர். என்று தற்போது கருதப்படுவதால், உத்தேச புதிய சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த காணாமல் போனவர்களை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.

புலம்பெயர் புலி அமைப்புகள் மற்றும் அவற்றுக்கு உதவும் சர்வதேச தரப்பினர், போரில் கொல்லப்பட்ட புலிப் பயங்கரவாதிகளை மாத்திரமல்லாது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று வேறு அடையாளங்களுடன் வாழ்ந்து வரும் புலிகளின் உறுப்பினர்களையும் காணாமல் போனவர்கள் எனக்கருதும்.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதானது, புலம்பெயர் புலிகள் மற்றும் அவர்களுக்கு உந்து சக்தியை வழங்கும் பலமிக்க சர்வதேச நாடுகளிடம் நாட்டை காட்டிக்கொடுப்பதாகும்.

இதனால், இதனை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad

Responsive Ads Here