நல்லூா் ஆதீனத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் கந்தபுராண எழுச்சி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் திணைக்கள உதவிப் பணிப்பாளா் இ.கர்ஜின் தலைமையில் நேற்று மாலை (29.07.2017) நடைபெற்றது.
.
இதில் பிரதம விருந்தினராக நல்லூா் பிரதேச செயலா் ஆ.சிறீ கலந்து கொண்டார் கந்தபுராணம் தொடா்பான சிறப்புரையை "பிழையான பாடலா?" என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபா் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார்..
கந்தபுராணத்தில் பார்வதி கல்யாணம் என்ற பொருளில் நல்லூா் ஸ்ரீதேவி வில்லிசைக் குழுவினரின் வில்லுப்பாட்டு நடைபெற்றது.
இதே வேளை தேர்ந்தெடுக்கப்பட்ட அறிநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. சிறப்புப் பேச்சாளரின் பேச்சுத் தொடர்பாக புதிர்பபோட்டி ஒன்றும் நடத்தப்பட்டு பெறுமதியான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.






















