காவ­டிச் சேவை செய்­ப­வர்­கள் பதிவு செய்­தி­ருத்­தல்வேண்­டும் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 19 July 2017

காவ­டிச் சேவை செய்­ப­வர்­கள் பதிவு செய்­தி­ருத்­தல்வேண்­டும்

காவ­டிச் சேவை செய்­ப­வர்­கள் அது குறித்துத் தத்­த­மது பகுதி உள்­ளூராட்சிச் சபை­க­ளில் பதிவு செய்து அனு­மதி பெற்­றி­ருத்­தல்வேண்­டும் என்று சாவ­கச்­சேரி சுகா­தார வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.
அண்­மைக்­கா­ல­மாக இந்து ஆல­யங்­க­ளில் உற்­ச­வங்­கள் நடை­பெற்று வரு­வ­தால் பலர் பல்­வேறு வகை­யில் காவ­டி­களை எடுத்து நேர்த்தி செய்­கின்­ற­னர்.
காவடி எடுக்­கும்­போது உட­லில் பாய்ச்­சப்­ப­டும் ஊசி­க­ளால் குருதி தொடர்­பான ஒவ்­வாமை நோய்க்குப் பலர் இலக்­காகி மருத்­து­வ­ம­னை­க­ளில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர் என்று முறை­யிடப்பட் டுள்­ளது.
செடில் காவ­டி­கள், பற­வைக் காவ­டி­கள், தூக்­குக் காவ­டி­கள், அலகு குத்­து­தல் போன்­ற­வைக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ஊசி­கள் சுகா­தார முறைப்­படி அவித்­துப் பயன்­ப­டுத்­தா­த­ தால் பலர் ஒவ்­வா­மை­க்கு உட்­ப­டு­கின்­ற­னர் என்று கூறப்­பட்­டி­ ருக்­கி­றது.
அத­னால் காவ­டிச் சேவை­யில் உள்­ள­வர்­கள் அனை­வ­ரும் தமது பிரிவு உள்­ளூ­ராட்சி சபை­யில் அது தொடர்­பில் பதிவு செய்து அதற்­கான அனு­ம­தி­யைப் பெற­வேண்­டும்.
இது தொடர்­பா­கக் காவடிச் சேவை­ யா­ ளர்­க­ளில் தென்­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில் உள்­ள­வர்­க­ளுக்­கான விழிப்­பு­ ணர்­வுக் கருத்­த­ரங்கு இன்று புதன் ­கிழமை மு.ப.9 மணிக்கு சாவ­கச்­சேரி சுகா­தார வைத்­திய அதி­காரி பணி­ம­னை­யில் இடம்­பெ­ற­வுள்­ளது.
பிர­தே­சத்­தில் காவ­டிச் சேவை­யை நடத்­தும் அனை­வ­ரும் இதில் கலந்து கொள்­ளு­மா­றும் சுகா­தா­ரப் பகு­தி­யி­னர் அறி­வித்­துள்­ள­னர். எதிர்­கா­லத்­தில் உரிய அனு­ம­திப் பத்­தி­ர­மின்றிச் சேவை­யில் ஈடு­ப­டு­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது” என்று அவர்­கள் அறி­வித்துள்­ள­னர்.

Post Top Ad

Responsive Ads Here