யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் சூட்டு சம்பவத்தை கண்டித்து யாழ் மாவட்டச் செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
அரச அலுவலர்களின் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும், அர்ப்பணிப்பான சேவைக்கு வெகுமதி துப்பாக்கி சூடா, நீதிக்கே இன்று நிர்க்கதி நிலைமை உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.








