யாழ்ப்பாணம், மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த இரு ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றும் இவர்கள் இன்றைய தினம் காலை 11:15 மணியளவில் மாட்டு வண்டி மூலம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்துக்கு வந்து திருமண பந்தத்தில் இணைத்துக் கொண்டனர்.
மாறுபட்ட கலாச்சார மேகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்கார மாப்பிளை ஒருவர் யாழ் மீசாலை தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, கரம் பிடித்துள்ளார்.
திருமணத்தின் மகத்துவத்தினை உணரத் தவறும் இக்கால கட்டத்தில் தமிழர் மரபுப்படி மாட்டு வண்டியில் திருமணம் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.







