நல்லூர் திருவிழாவிற்கான கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 27 July 2017

நல்லூர் திருவிழாவிற்கான கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத் திருவிழா நாளை 28.07.2017 ஆரம்பமாகிறது. பாரம்பரியமாக கொடிச்சீலை இன்று [27.07.2017] காலை ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளைய தினம் காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளன.

கொடியேற்றத் திருவிழாவுக்காக ஏற்றப்படுகின்ற கொடி வருடா வருடம் செங்குந்த பரம்பரையினரால் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகும்.

வழமைபோல், இம்முறையும் கல்வியங்காட்டு பகுதியிலுள்ள செங்குந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களின் வீட்டிலிருந்து காலை 8.00 மணிக்கு நடைபெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து எடுத்துவரப்பட்ட கொடிச்சீலை, கல்வியங்காடு வேல்மடம் முருகன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறிய தேரில் வைத்து நல்லூர் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.

காலை10.00 மணியளவில் நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் இந்தக் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது.
படங்கள் – ஐ.சிவசாந்தன்













Post Top Ad

Responsive Ads Here