முள்ளிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 2 July 2017

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட சில குண்டுகள் இன்று காலை வெடித்துச் சிதறியுள்ளன.

முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் வெளிப்பிரதேசத்தில் பொது மக்களின் வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை இலங்கை படையினர் அண்மையில் விடுவித்திருந்தனர்.

குறித்த காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த காணி நிலங்களை பொதுமக்கள் சுத்தம் செய்து தீ மூட்டிய போதே குறித்த குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன.

இதனால் அந்த பிரதேசத்தில் சிறிது நேரம் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டமையினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்த நிலையிலும் அப்பகுதியில் இன்றும் வெடிபொருட்கள், மற்றும் யுத்த சுவடுகள் காணப்படுகின்றன.

புதைக்கப்பட்ட நிலையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் ஆங்காங்கே வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.

அந்த வகையில் படையினரால் விடுவிக்கப்பட்ட நிலங்களிலும் இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் காணப்படுகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் போது சில நேரங்களில் வெடிப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Responsive Ads Here