சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன் படி வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்கர் களமிறங்கினர்.சவுமியா சர்கர் ஆட்டத்தின் முதல் ஓவரிலே புவனேஸ்வர் குமார் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து சபிர் ரஹ்மான் களம் இறங்கினார்.
அவர் களம் இறங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடினார். தமீம் இக்பால் நிதானத்தை கடைபிடித்தார்.வங்கதேச அணி 6.5 ஓவரில் 31 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது 2-வது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடிய சபிர் ரஹ்மான் 21 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தமீம் இக்பால், முஷ்தபீர் ரஹீம் உடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் எண்ணிக்கை ஆமை வேகத்தில் உயரத்தொடங்கியது.
வங்காதேச அணி 18.5 ஓவரில் 100 ஓட்டங்களைத் எட்டியது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தமீம் இக்பால் அரைசதம் கடந்து 70-ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.அப்போது வங்கதேச அணி 28 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் (15), முஷ்பிகுர் ரஹிம் (61) என அடுத்தடுத்து வெளியேற, வங்கதேச அணி இறுதியாக 50-ஓவர் முடிவில் 7-விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் எடுத்தது.இந்திய அணி சார்பில் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.இப்போட்டியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 10-ஓவர் வீசி 54-ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் ரசிகர்களை ஏமாற்றினார்.
இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தா
டி வரும் இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா-தவான் களமிறங்கினர்.எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷிகர் தவான் (46) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அதன் பின் ஜோடி சேர்ந்த ரோகித், கோஹ்லி வங்கதேச பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் அரங்கில் 11வது சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் கோஹ்லியும் மின்னல் வேகத்தில் ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி 40.1 ஓவரில், 1 விக்கெட்டுக்கு, 265 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (123), கோஹ்லி (96) அவுட்டாகாமல் இருந்தனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 18ல் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறுவது இது நான்காவது முறையாகும்.
இந்திய அணி இதுவரை 2 முறை (2002, 2013) சாம்பியன் பட்டமும், 1 முறை (2000) இரண்டாவது இடமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

