வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அவசர சந்திப்பு - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 16 June 2017

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அவசர சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அவசரமாக சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சுமூகமாக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Responsive Ads Here