இராமநாதபுரம் மேற்கு அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழா 20.06.2017 பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை அதிபர் சு.சுதாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
.
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பாடசாலையின் பழைய மாணவருமாகிய அமரர் வே. செல்வத்துரையின் நினைவாக அவரது குடும்பத்தினரால் அமைக்கப்பெற்று பாடசாலைச் சமூகத்தவரால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் ச.லலீசன் கலந்து கொண்டார்.
.
சிறப்பு விருந்தினர்களாக அமரரின் பிள்ளைகளான புதுக்குடியிருப்பு றோ.க. பாடசாலை ஆசிரியர் கௌரிதேவி செந்தில்நாதன், கிளிநொச்சி தேசிய சேமிப்பு வங்கி உதவி முகாமையாளர் விஜயதேவி லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.
சிலை திறப்பு விழாவையொட்டி பாடசாலை மாணவரிடையே நடத்தப்பட்ட திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்ட முதலாவது திருவள்ளுவர் திருவுருவச் சிலையாக இச்சிலையே அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேசப் பிரமுகர்கள், அரசியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
Tuesday, 20 June 2017
கிளிநொச்சி இராமநாதபுரத்தில் திருவள்ளுவருக்குச் சிலை
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.











