என்னை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருக்கின்றனர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் - www.radiotamizha.com

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday 25 June 2017

என்னை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருக்கின்றனர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்திருக்கமுடியும்.

எனினும், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களில் வரவேண்டும் என்பதில் சிலர் குறியாக இருந்தனர். அவர்கள் பேசுவதற்கு அவைத்தலைவர் உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில், எவ்வாறு குறித்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்து வைக்க முடியும். என்னை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருக்கின்றனர்.

அதற்கான சரியான தருனம் வரும் வரையில் அவர்கள் காத்திருக்கின்றார்கள்.

2013ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் ஒழுகத் தொடங்கிய காலம் முதல் என் மீதான கோபம் சிலர் இடத்தில் வளர்ந்து வந்துள்ளதை அவதானித்து வந்துள்ளேன்.

எனவே, எப்போதும் ஏதும் நடைபெற கூடும் என்பதை எதிர்பார்த்திருந்தேன். பதவி மீது மோகம் இல்லாத காரணத்தினால் வீடு செல்லவும் தயாராகவே இருந்தேன்.

இந்நிலையில், தமிழ் மக்களை இனிமேல் கடவுளே காப்பாற்ற வேண்டும் எனவும், இது உறுதியான ஒன்று" எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Responsive Ads Here